கள்ளத்தொடர்புக்கு இடையூறு - பெற்ற குழந்தையை அடித்தே கொலை செய்த கொடூர தாய்
தஞ்சாவூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற மகளை அடித்து கொன்ற கொடூர தாயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் கோரிகுளத்தை சேர்ந்த விஜயலட்சுமி கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் விஜயலட்சுமி அவரது உறவினரான வெற்றிவேல் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் தஞ்சை கல்லணை கால்வாயின் 20 கண் பாலம் பகுதியில் சிறுமி ஒருவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில் அது விஜயலட்சுமியின் 7 வயது மகள் என்று கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து விஜயலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வெற்றி வேல் என்பவரை காதலித்து வருவதாகவும், அவர்களது உறவுக்கு இடையூறாக இருந்ததாகவும் குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயலட்சுமி மற்றும் வெற்றிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.