திமுகவினருக்கு தர்ம அடி கொடுத்த மக்களுக்கு வாழ்த்துக்கள் சொன்ன பாஜக
தஞ்சாவூரில் பேக்கரியில் ரகளை செய்த திமுகவினருக்கு தக்க பதிலடி கொடுத்த கிராம மக்களுக்கு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அடுத்த சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இந்த கடைக்கு மன்னார்குடி திமுக நிர்வாகிகள் 6 பேர் டீ குடிக்க வந்துள்ளனர்.
அப்போது கடையில் இருந்த பெண்ணிடம் சிகரெட் கேட்டுள்ளனர். சிகரெட் கொடுக்க தாமதமானதால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரது ஆடையை பிடித்து இழுத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள், அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து துவம்சம் செய்தனர். தற்போது அவர்கள் 6 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ரகளை செய்த திமுகவினருக்கு தக்க பதிலடி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பேக்கரியில் ரகளை செய்த திமுகவினருக்கு தக்க பதிலடி கொடுத்த தஞ்சை மாவட்ட சூரக்கோட்டை கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்! pic.twitter.com/eVkwFzSjKN
— S.R.SEKHAR ?? (@SRSekharBJP) September 14, 2021