30 அடி சுவரில் ஓவியம் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியருக்கு பாராட்டு!
பாபநாசம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் 30 அடி சுவரில் கொரோனா பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புறம் உள்ள 30 அடி சுவரில் கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டது.
மக்கள் எளிதில் பார்த்து உணர்ந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த கொரோனா ஓவிய விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் பலரும் தங்களது வரவேற்புகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.