ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரர்கள்! சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!
தஞ்சை அருகே நேற்று வெட்டாற்றில் குளித்த அண்ணன், தம்பி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் அபினேஷ் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் நேற்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டாற்றில் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களது நண்பர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக தேடி இருவரையும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.