யார் இந்த ஜான் பாண்டியன் - என்ன செய்யப் போகிறது தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்?
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேவேந்திர குல வேளாளர் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
இந்தக் கட்சி 2000 ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கப்பட்டது. இக்கட்சியின் தலைவர் பெ. ஜான் பாண்டியன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன்.
ஜான் பாண்டியன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நலச்சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவராக 1974-லிருந்து 1979 வரை போராடிக்கொண்டிருந்தவர்.
ஜான் பாண்டியன்
தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜான்பாண்டியனின் அரசியல் பயணம் பாட்டாளி மக்கள் கட்சியில் தான் தொடங்கியது. 1989-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய போது, அவர் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை சிறப்புகள் குறித்து மக்களிடம் முழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சி 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே, அதாவது கட்சி தொடங்கிய ஐந்தாவது மாதத்தில்,
பாமகவில் ஓர் அங்கம்
நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் தேர்தல் ஆகும். அந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக ஜான்பாண்டியன் நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் 83,933 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
1991-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த அதன் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜான் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ராமதாஸின் செல்லப்பிள்ளை
அந்தத் தேர்தலில் அவர் 29,021 (30.24%) வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கெல்லாம் மேலாக ஜான்பாண்டியன் - பிரிசில்லா பாண்டியன் இணையர் திருமணத்தை நடத்தி வைத்ததும் பாமக தலைவர் ராமதாஸ்தான்..
``தலித் என்ற சொல்லே, `வெறுக்கப்படுகிறவன்' என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது'' என்று எப்போதும் முழக்கமிடுபவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்.
கருணாநிதியை எதிர்த்து..
சாதிப் பிரச்னைகளைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டம் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெயரிடப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களை நீக்க அன்றைய முதல்வர் கருணாநிதி முயற்சி செய்தபோது, முதல் ஆளாக கையெழுத்திட்டவர்.
அதே சமயம், பட்டியல் இனத்திலுள்ள வேளாண் தொழில் செய்துவரக்கூடிய ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி, `தேவேந்திர குல வேளாளர்' என்ற ஒரே பெயரில் அரசாணை வெளியிடுவதற்குப் பதிலாக `ஜனார்த்தனன் கமிட்டி'யை அவர் அமைத்தது தேவையே இல்லாதது; முதல்வராக இவரே கையெழுத்திட்டு அறிவித்திருக்கலாம்.
மாநில இளைஞரணித் தலைவர்
ஏனெனில், கடந்த காலங்களில் இதேபோல் பல உட்பிரிவுகளை ஒன்றாக்கி `நாடார்', `அருந்ததியர்', `முக்குலத்தோர்', `கொங்கு வேளாளர்' என்று எத்தனையோ அறிவிப்புகளை தமிழக முதல்வர்களே அறிவித்திருக்கிறபோது, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மட்டும் கமிட்டி, ஆய்வு என்று ஏமாற்றிக்கொண்டிருப்பது ஏன் என்று கருணாநிதியை எதிர்த்தார்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நலச்சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவராக 1974-லிருந்து 1979 வரை போராடிக்கொண்டிருந்தவர். ஒருகட்டத்தில், சென்னையில் இருந்த சில தலைவர்கள் செய்துகொண்டிருந்த உள் அரசியலால்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டேன்.
தேவேந்திர குல வேளாளர்
அதன் பின்னர்தான் பட்டியல் இனத்துக்குள்ளாகவே இப்படியெல்லாம் தனித்தனி பிரிவினர்களாக ஒருவரையொருவர் பாரபட்சமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயமே எனக்குத் தெரியவந்தது. அதன் பின்னர்தான் நான், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கான தலைவராகப் பாடுபட ஆரம்பித்தேன்.
அதேசமயம் பட்டியல் இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நான் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் கூட அந்த மக்கள் என்னோடு நட்பாகப் பழகுகிறார்களே தவிர, இணக்கமாக இருப்பதற்குத் தயங்குகிறார்கள்.
நீங்கள் யார் முடிவெடுக்க?
அதற்குக் காரணம் எங்களுக்குள் மனதளவில் பிரிவினையை உண்டாக்கிவிட்ட தலைவர்கள்தான் என அடிக்கடி தனது ஆதங்கத்தை பகிர்வார். தலித் என்ற வார்த்தையே கிடையாது. அது என்ன, எங்களுக்கு மட்டும் ஆதிதிராவிடர், பறையன், பள்ளன் என்றெல்லாம் அடைமொழிப் பெயர் சூட்டுகிறீர்கள்?
நாடார், தேவர், கோனார், பிள்ளை என்று எத்தனையோ சாதிகள் இருக்கின்றனவே... அவர்களுக்கெல்லாம் ஏன் இதுபோன்ற பெயர்கள் வைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே குறிப்பிட்டு இதுபோன்ற பெயர்களை வைப்பது ஏன்? எங்களுக்கு என்ன பெயர் சூட்டுவதென்று நீங்கள் எப்படி முடிவெடுக்க முடியும்?
மண்டகப்படி உரிமை
அதை நாங்கள்தானே முடிவு செய்ய வேண்டும் என தனது சமுதாய மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர் நிறுத்தியதே இல்லை. பல ஆண்டுகளாக பழனி முருகன் கோவிலில் தேவேந்திர குல மக்களுக்கு மறுக்கப்பட்ட மண்டகப்படி உரிமையை
1996 ஆம் ஆண்டு மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறப்பாக வழிநடத்தி பெற்றித் தந்தது இவர் செய்த சாதனைகளில் முக்கியமானதாக கருதப்படும் ஒரு செயலாகும். மேலும் இவரது தொடர் முழக்கங்களால் பட்டிலியன வெளியேற்றத்தின்
அதிமுகவுடன் கூட்டணி
முதல் படியாக ஏழு ஜாதிகளை சேர்ந்தவர்களை ஒன்றாக்கி தேவேந்திர குள வேளாளர் எனும் அறிவிக்க வகை செய்யும் மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எழும்பூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அந்த கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.
சாதகமாக அமையுமா?
இவர் ஏற்கனவே 2001-ம் ஆண்டு இதே எழும்பூர் தொகுதியில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளராக போட்டியிட்டு 86 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் எழும்பூரில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த சட்டசபை தேர்தலில் விரும்பாத சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதாக கூறி, அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அறிவித்தார்.
இதுவரை எந்த அரசியல் பதவிகளிலும் பொறுப்பு வகிக்காத ஜான் பாண்டியன், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதை மட்டும் எந்த சூழ்நிலையிலும் கைவிட்டதில்லை. வரும் சட்டமன்றத் தேர்தல்கள் இவருக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.