18 காளைகளை அட க்கிய வீரத்தமிழன்: கார் பரிசாக பெற்றவர் யார் தெரியுமா?
பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று பாலமேட்டில் நடந்தது. இப்போட்டியில் கலந்து கொண்டு 18 காளைகளை அடக்கிய கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளேன். ஆனால் கார் பரிசாக பெறுவது இதுவே முதன்முறை, பாலிடெக்னிக் படித்துள்ள நான் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்து வருகிறேன்.
உயரமும் குறைவாக இருப்பதால் போலீஸ் வேலைக்கும் செல்ல முடியவில்லை, எனவே எனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் சிறந்த காளைக்கான முதல் பரிசை பாலமேடு யாதவா உறவின் முறைக்குச் சொந்தமான காளை பெற்றது.
அந்தக் காளைக்கு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன்குமார் வழங்கிய ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நாட்டினப் பசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.