எதுவும் இல்லை ஒரு துணியோட வந்துருக்கோம் : சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர்

Sudan
By Irumporai Apr 27, 2023 06:29 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சூடானில் சிக்கி தவித்த தமிழர்கள் 9 பேர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் தற்போது மதுரை வந்தடைந்தனர்.

சூடானில் சிக்கிய தமிழர்கள்

சூடானில் தற்போது கடந்த 10 நாட்களுக்கு மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே தீவிரமாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது, இது வரை நடந்த போரில் 400 க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்த நிலையில் 3,500 க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை இரு தரப்பினரிடையே போர் முடிவுக்கு வரவில்லை இந்த நிலையில் உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவித்த 9 தமிழர்கள் தற்போது விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனஎ அப்போது செய்தியாளர்களிடம் தங்களின் சோகத்தை பகிர்ந்தனர். 

துணியோட வந்துட்டோம்  

அதில், எங்கள் பகுதியில் போர் தொடங்கிய நாளிலிருந்து குடிநீர், மின்சாரம் தடைபட்டது. இதனால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். எங்களிடம் உள்ள உணவை சிக்கனமாக பயன்படுத்தி வாழ்ந்தோம். சூடானில் இருந்து இந்தியா வருவதற்கு இந்திய தூதரக அதிகாரி எங்களுக்கு உதவினார், எங்களை பத்திரமாக சொந்த ஊர் வர உதவிய இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்று. இவ்வாறு அவர் கூறினார்.

எதுவும் இல்லை ஒரு துணியோட வந்துருக்கோம் : சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர் | Tamils Who Returned From Sudan Tearfully

சூடான் நிலவரம் குறித்து கிருத்திகா என்ற மற்றொரு பெண் கூறும்போது; நான் கடந்த 8 ஆண்டுகளாக சூடானில் வசித்து வருகிறேன். கடந்த 15 நாட்களாக அங்குள்ள சூழல் எங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. கடந்த 8 நாட்களாக நாடோடிகளாக வாழ்ந்தோம். கஷ்டப்பட்டு சம்பாதித்தது அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு ஒரு துணியை மட்டும் கையில் கொண்டுவந்துள்ளோம். எங்களை பத்திரமாக அழைத்துவந்த ஒன்றிய அரசுக்கும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி எனக் கூறினார்.