குவைத்தில் தமிழர் சுட்டு படுகொலை - மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவாரூரை சேர்ந்த தமிழர் குவைத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் படுகொலை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுார் லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்.இவரது மனைவி வித்யா.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. முத்துக்குமரன் தனது குடும்ப சூழல் காரணமாக கடந்த 3 ஆம் தேதி குவைத் நாட்டிற்கு சென்றார்.
வேலையில் சேர்ந்த அவருக்கு அந்த வேலை கடினமாக உள்ளதாக குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் குவைத் நாட்டிற்கு சென்று 4 நாட்களிலேயே கடந்த 7 ஆம் தேதி முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
முத்துக்குமரன் உயிரிழந்த சம்பவம் கடந்த 9 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியில் இருக்கும் முத்துக்குமரனின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரித்த குடும்பத்தினர் முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
முதன் முறையாக வெளிநாடு சென்றுள்ள அவருக்கு எவ்வித முன்விரோதம் இல்லாத நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் முத்துக்குமரனை இழந்து வாடும் குடும்பத்திற்கு இழப்பீடுகளை பெற்றுத்தர வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.