அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய துபாய் வாழ் தமிழர்கள்
பழனி அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை துபாய் வாழ் தமிழர்கள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தட்டுப்பாடுயின்றி ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் தன்னார்வலர்கள் சிலர் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் துபாய் வாழ் தமிழர்கள் நல சங்கம் சார்பில் பழனி அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கப்பட்டது. இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.