மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
மும்பை தானேவில் நடைபெற்ற கிரேன் விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தமிழர்கள் உயிரிழப்பு
விரைவுச்சாலை கட்டுமானத்திற்காக பாலம் கடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ராட்சத கிரேன் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இந்த அசம்பாவிதத்தில் இரண்டு தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்த 36 வயதான சந்தோஷ், நாகப்பட்டினம் வேதாரணையத்தை சேர்ந்த 23 வயதான கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
இந்நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின்,
சந்தோஷ் மற்றும் கண்ணன் ஆகியோர் உயிரிழந்த செய்து கேட்டு மிகுந்த வேதனையுற்றதாக குறிப்பிட்டு அவர்களின் உடல்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்கொண்டு வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த இருவரின் ,குடும்பத்திற்கும் தனது இரங்கலை தெரிவித்து கொண்ட முக ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.