எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே : ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து ,மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி

By Irumporai Apr 28, 2022 04:54 AM GMT
Report

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடலை இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி. சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து & வந்தே மாதரம் பாடல்களையும் இசைக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் கூறுகையில், அனைத்து இந்திய மொழிகள், கலாச்சாரங்களையும் போற்றுவதே மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் சம்ஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே : ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து ,மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி | Tamils In Iits Central Ministry Of Education

இதுபோன்று 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற 58வது பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டது சர்ச்சையானது.

இதனைத்தொடர்ந்து திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த டிசம்பர் மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடலை இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.