கடலும், கண்டங்களும் நம்மை பிரித்தாலும் தமிழ் இணைக்கும் : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Jan 12, 2023 06:34 AM GMT
Report

தனது கடின உழைப்பால் தனது நாட்டையும் உயர்த்தி காட்டியவர்கள் தான் தமிழர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தனித்துறை

சென்னை கலைவாணர் அரங்கில் அயலக தமிழர் தின விழாவில் பேசிய முதலமைச்சர், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் அயலக தமிழர் தினம் கொண்டாடட்டம். திமுக அரசு அயலக தமிழர்களுக்காக தனி துறையை உருவாக்கி அமைச்சரை நியமித்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

அயலக தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். 2010-ல் அயலக தமிழர்களின் நலன் காத்திட ஒரு துறையை உருவாக்க கலைஞர் முயன்றார்.   

கடலும், கண்டங்களும் நம்மை பிரித்தாலும் தமிழ் இணைக்கும் : முதலமைச்சர் ஸ்டாலின் | Tamils By Inexorable Forces Cm Stalin

தமிழ் நம்மை இணைக்கும் 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் தேதி அயலக தமிழர் நாளாக கொண்டாடப்படும் என திமுக அரசு அறிவித்தது. கொரோனாவால் 80,000 பேர் தமிழகம் திரும்பியபோது மானியத்துடன் கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.

அயலக தமிழர்களின் ஆற்றலும் ஆராய்ச்சி திறனும் தனிப்பெரும் வரலாறாக உருவாகி வருகிறது. உழைப்பால் தன்னை மட்டுமின்றி தனது நாட்டையும் உயர்த்தி காட்டியவர்கள் தான் தமிழர்கள் எனவும் தெரிவித்த முதலமைச்சர், கடலும், கண்டங்களும் நம்மை பிரிந்திருந்தாலும் தமிழ் இணைக்கும் என்றார்.