உலக தமிழர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து
உலக தமிழர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதனையொட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டில், இன்று முதல் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு நானும் எனது மனைவியும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வைஷாகி, நவராத்திரி, சங்ரான், விஷூ வாழ்த்துகள். வங்காளம், கம்போடியன், லியோ, மியான்மர், நேபாளம், சிங்களம் , தமிழ், தாய்லாந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
Jill and I send our warmest wishes to the South Asian and Southeast Asian communities who are celebrating Vaisakhi, Navratri, Songkran, and the incoming New Year this week. Happy Bengali, Cambodian, Lao, Myanmarese, Nepali, Sinhalese, Tamil, Thai, and Vishu New Year!
— President Biden (@POTUS) April 13, 2021