மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த விஜய்சேதுபதி - சந்தோஷத்தில் ரசிகர்கள்
சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக,சித்திரை திருநாளாக தமிழர்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உறவினர்களும், நண்பர்களுக்கும் தமிழ் மக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும், சமூகவலைத்தளங்களில் தமிழ் புத்தாண்டை நெட்டிசன்கள் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பொதுமக்கள் அதிகாலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ☺️ pic.twitter.com/gLJcYePRFK
— VijaySethupathi (@VijaySethuOffl) April 14, 2022