சிகரம் தொட்ட தமிழர் : முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

M K Stalin DMK
By Irumporai May 21, 2023 01:54 AM GMT
Report

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழ்நாட்டு இளைஞரை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

எவரெஸ்ட் தமிழர்

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பியுள்ளர். இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞரை பாராட்டியுள்ளார், இது குறித்து முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள்.

சிகரம் தொட்ட தமிழர் : முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு | Tamilnadu Youth Who Reached The Everest Peak

முதலமைச்சர் பாராட்டு

அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.