அடுத்த 24 மணி நேரத்தில் நெருங்கி வருகிறது ‘யாஸ்’ புயல் - கரையைக் கடக்கப் போகும் மாநிலம் இதுதானாம்?
tamilnadu-yas-storm
By Nandhini
வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிலையில் இன்று புயலாக வலுப்பெற்றிருக்கிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு-
- வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
- வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த யாஸ் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறுகிறது.
- இந்த புயல் 26ம் தேதி ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது.
- இந்த புயல் கரையை கடக்கும் போது 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
- 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
- புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரியில் உள்ள மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.