நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ வீட்டில் அதிரடி ரெய்டு - நடந்தது என்ன?
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் உறவினரும், பிரபல தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ சமீபத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படங்களின் முதலீடு தவிர மற்ற சில தொழில்களும் செய்து வருகிறார்கள். இவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, மாஸ்டர் படத் தயாரிப்பாளரும் , நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. சீன நிறுவனமான ஷாவ்மி நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று முதல் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
அதன் எதிரொலியாக செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீடு தவிர்த்து சென்னை மற்றும் பெங்களூரில் இருக்கும் சேவியர் பிரிட்டோவின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.