தமிழகத்தில் மதுக்கடைகள் மூடல் - முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் புதிய தளர்வுகளின் படி, எல்லையோர மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று முதல்வர் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கானது கொரோனா பாதிப்பு குறையும் பட்சத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பல்வேறு கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் திறக்கப்படாத கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட குடிமகன்கள் வேறு மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கோவை அருகே உள்ள கேரள மாநிலத்தின் பாலக்காட்டிற்கு தமிழக மதுபிரியர்கள் நேரடியாக சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர்.
இவர்கள் நெடுஞ்சாலைகளில் வந்தால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று கருதி, வனப்பகுதி வழியாக சென்று வருவதாக சொல்லப்படுகிறது. இதையொட்டி தமிழக - கேரள எல்லைப் பகுதியில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தமிழகத்தில் ஊரடங்கு அமலில்
இருப்பதால் இருமாநில எல்லையோர மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மதுபிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.