தமிழ்நாடு என்ற பெயர்தான் அனைவரையும் இணைத்த இலக்கு : சேகுவேரா மகள்பேச்சு
தமிழ்நாடு என்ற பெயர்தான் அனைவரையும் ஒன்றாக இணைத்த இலக்கு என சே குவாராவின் மகள் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வந்த சேகுவேரா மகள்
கடந்த ஜனவரி 17ம் தேதி விமானம் மூலம் சேகுவேரா மகள் அலெய்டா சே குவேரா விமானம் மூலம், கேரளாவில் இருந்து சென்னை வந்தடைந்தார். தமிழகம் வந்த அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்னா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு இணைத்தது
இந்த நிகழ்வில் பேசிய அலாய்டா குவாரா, தமிழ்நாடு என்ற பெயர்தான் அனைவரையும் ஒன்றாக இணைத்த இலக்கு. எனவே நீங்கள் அதை நோக்கி தான் பயணிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், கியூபா மீது அமெரிக்க பல வழிகளில் தாக்குதல் நடத்துவதாக கூறியவர் அமெரிக்காவால் ஒருபோதும் கியூபா மக்களின் மன உறுதியை பறிக்க முடியாது எனக் கூறினார்.