தமிழரசி எம்.எல்.ஏவின் கணவர் கழுத்தை நெரித்த திமுக நிர்வாகி - அதிர்ச்சி வீடியோ!
மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் கணவர் ரவிக்குமாரை இவர் திமுக நகர் பொறுப்பாளர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 64ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜன், ராஜகண்ணப்பன் எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி, ராஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்தும் போது முன்வரிசையில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் கணவர் ரவிக்குமார் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் வரிசைக்கு வருமாறு பரமக்குடி வடக்கு நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம் கூறினார். வர மறுத்ததால், தொடர்ந்து இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், எம்எல்ஏவின் கணவரின் கழுத்தை நகர் பொறுபாளர் நெரிக்க முயற்சி செய்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, திமுகவினர் முக கவசமின்றி, சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்து சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.