ஊரக உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 110 பேர் வெற்றி - நிர்வாகிகள் தகவல்

tamilnadu-vijay-election
By Nandhini Oct 13, 2021 07:39 AM GMT
Report

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் மும்முரமாக எண்ணப்பட்டு வருகிறது.

நேற்று காலை 8 மணி முதல் ஆரம்பமான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு, மோதல், வாக்குப்பேட்டி பிரச்சனை உட்பட சில காரணங்களால் வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. ஆரம்ப முதலே திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்று வெற்றி அடைந்து வருகிறது.

அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதுவரை நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் வாக்குப் பெட்டியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 110 பேர் வெற்றி பெற்றதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்திருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்ட நிலையில் 110 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 110 பேர் வெற்றி - நிர்வாகிகள் தகவல் | Tamilnadu Vijay Election