பறவை காய்ச்சல் வராமல் இருக்க இறைச்சியை வேகவைத்து சாப்பிடுங்கள் :அமைச்சர் விஜயபாஸ்கர்
பறவை காய்ச்சல் வராமல் இருக்க சிக்கன் இறைச்சி போன்றவற்றை ,நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடி மதிப்பிலான புதிய இருதய சிறப்பு பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் .
தமிழகம் முழுவதும் 18 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். கிராமங்களில் உள்ளோருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டமைப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது, ராஜஸ்தான்,கேரளா மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கடுமையாக இருப்பதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் , மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறைச்சி உணவுகளை நன்றாக வேகவைத்து உண்ணவேண்டும் என தெரிவித்துள்ளார்.