வேதா இல்ல விவகாரம் - அடுத்த நடவடிக்கை என்ன?

ஜெயலலிதாவின் வேதா நிலைய விவகாரத்தில் அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை கேட்டு அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது -

ஜெயலிதாவின் வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இவ்வழக்கில் ஆஜரான அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையைப் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறைச்சாலைகளில் மத்திய மாநில அரசுகளின் தணிக்கை குழு மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது, தவறு செய்யும் இளம் சிறார்களை திருத்த இயன்ற அளவு சிறார் சீர்திருத்த பள்ளிகளில் சிறப்பு பயிற்சி தரப்படுகின்றன. சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிச் செல்லும் சிறுவர்களை கண்டுபிடிக்கிறோம். அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்