பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார் தான் ஆசான் - கவிஞர் வைரமுத்து கண்டனம்
பெரியார் சிலைக்கு செருப்பு அணிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து, தனது பாணியில் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு, நேற்று மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடியை தூவியும் அவமரியாதை செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள். பெரியார் சிலை அவமதிப்பு குறித்து 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதனையடுத்து அந்த நபரை தேடும் பணி நடந்து வருகிறது. பெரியார் சிலை அவமதிப்புக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
“இப்படி ஓர் எதிர்ப்பு வடிவத்தைக்
கற்றுக் கொடுத்தவரே பெரியார்தான்
பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும்
பெரியார்தான் ஆசான்
"வாழ்க வசவாளர்கள்"
என்றார் அண்ணா
"சிறப்புறுக செருப்பாளர்கள்"
என்போம் நாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஓர்
— வைரமுத்து (@Vairamuthu) January 10, 2022
எதிர்ப்பு வடிவத்தைக்
கற்றுக் கொடுத்தவரே
பெரியார்தான்
பெரியாரை
அவமதிக்கிறவர்களுக்கும்
பெரியார்தான் ஆசான்
"வாழ்க வசவாளர்கள்"
என்றார் அண்ணா
"சிறப்புறுக செருப்பாளர்கள்"
என்போம் நாம்#பெரியார் #Periyar pic.twitter.com/gyvZQC7rdF