தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30 வரை கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு!
tamilnadu
extra vaccine provide
By Anupriyamkumaresan
தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான நாட்களில் கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் 2ஆம் தேதி வரையில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் தற்போது 7.24 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பிற மாநிலத்திலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
