‘நல்லகாலம் பொறக்குது...’ - குடுகுடுப்பைக்காரர் போல் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்

tamilnadu Urban local elections Vote collector
By Nandhini Feb 09, 2022 03:56 AM GMT
Report

வேலூரில் குடுகுடுப்பைக்காரர் போல் வேடமிட்டு வாக்காளர்களிடம் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

வரும் 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, பிரச்சாரத்தை அரசியல் கட்சியினர் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், மக்களிடம் வாக்குகளை பெற மக்களை கவரும் வகையில் வேட்பாளர்கள் பல்வேறு விதமான பிரச்சார யுக்திகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனையடுத்து, வேலூர் மாநகராட்சி மற்றும் நகர, பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்தும், அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையிலும் சேலம் மகேஷ்வரன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து உடுக்கை அடித்தவாரு வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

‘நல்லகாலம் பொறக்குது...’ - குடுகுடுப்பைக்காரர் போல் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர் | Tamilnadu Urban Local Elections Vote Collector