நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - நீலாங்கரையில் நடிகர் விஜய் வரிசையில் நின்று வாக்களித்தார்
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
நகராட்சி மற்றும் பேரூராட்சி மக்கள் வாக்களித்து வருகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தல் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. கொரோனா தொற்று பாதித்த நபர்கள் இன்று 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தியுள்ளார். நீலாங்கரை வாக்குச்சாவடி வாக்கு செலுத்த சிவப்பு நிற காரில் வந்த விஜய், வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தி இருக்கிறார். ‘