தேர்தல் நடக்க 2 நாளே உள்ள நிலையில் திமுக வேட்பாளர் திடீர் மரணம் - பரபரப்பு சம்பவம்
அந்தியூர் அருகே திமுக வேட்பாளர் ஐயப்பன் பிரச்சாரத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, திமுக, அதிமுக, பாஜக, சுயேட்சை உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர், பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
திமுக வேட்பாளர் இறந்த செய்தியை கேள்விப்பட்ட அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று ஐய்யப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தேர்தல் நடக்க 2 நாட்களே உள்ள நிலையில் திமுக வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.