உக்ரைனில் பயின்ற மாணவர்கள் - சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!
சொந்த நாட்டிலேயே மருத்துவ கல்வி பயில மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளூவர் கோட்டத்தில் உக்ரைன் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
உக்ரைனின் நடைபெற்று வரும் போர் காரணமாக தாய் நாடு திரும்பி உள்ள அவர்கள் சொந்த நாட்டிலேயே மருத்துவ படிப்பை தொடர முழக்கமிட்டனர்.
மருத்துவ படிப்பின்றி மன உளைச்சலில் இருப்பதாக கூறிய அவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மருத்துவ படிப்புக்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய பெற்றோர் உள்நாட்டில் நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற்று தான் அவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க அனுப்பினோம்.
40 லட்சம் வரை கடன் வாங்கி தான் படிக்க வைப்பதாக தெரிவித்தனர்.போர் காரணமாக தான் வெளியேறினார்கள் இல்லை என்றால் எப்போதே மருத்துவர்கள் ஆகியிருப்பார்கள் என்றனர்.