தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு குறித்து இரு தினங்களில் முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

covid tamil college
By Jon Jan 21, 2021 06:27 PM GMT
Report

கொரோனா ஊரடங்கிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அந்தவகையில் வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் திறந்துள்ளதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதமே கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு எதிர்ப்புகள் எழவே அந்த முடிவு கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் மேலும், ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றி ஆலோசனை நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.