சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை : 4 சுரங்கப்பாதைகள் மூடல்
chennai
close
tunnels
By Nandhini
சென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை பதிவான கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து தேங்கி இருக்கிறது. இதனால், சென்னை நகரில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருக்கிறது.
துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.