Sunday, Jul 20, 2025

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை - சென்னையில் தக்காளி கிலோ எவ்வளவு தெரியுமா? இதோ

Tomato
By Nandhini 3 years ago
Report

ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாவதால் இல்லத்தரசிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ நவீன் தக்காளி ரூ.45-க்கும் நாட்டு தக்காளி ரூ.38-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது.

சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணகிரி,ராயக்கோட்டை,கர்நாடகா,மற்றும் ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து இருக்கும்.

சென்னையின் தினசரி தேவை 1000 டன்னாக இருந்து வரும் நிலையில் தற்போது தக்காளி வரத்து 500 டன்னாக குறைந்துள்ளது. இதனால் நாட்டு தக்காளி விலை கிலோ ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.  

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை - சென்னையில் தக்காளி கிலோ எவ்வளவு தெரியுமா? இதோ | Tamilnadu Tomato Price Increase