எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை தெரியுமா?

districts red alert today cyclone
By Anupriyamkumaresan Nov 09, 2021 04:55 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

 வங்கக் கடல் பகுதியில் இன்று ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை தினம், நாளை மறு தினம், ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும், மிக கனமழை அறிவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை தெரியுமா? | Tamilnadu Today Cyclone Red Alert Districts What

அதனடிப்படையில் நாளை பெரம்பலூர், கடலூர், அரியலூர் ,கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்கள் அதோடு புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் மறறும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சென்னை, சிவகங்கை, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல நாளை மறுதினம் விழுப்புரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.