தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த, இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் உயிரிழந்தார்

tamilnadu the-psychiatrist-died- sharda-menon
By Nandhini Dec 06, 2021 06:41 AM GMT
Report

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் உயிரிழந்தார்.

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவர் 1961ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.

அந்த மையத்தின் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியைத் தொடர்ந்த அவர், மனநலம் பாதித்தவர்கள் மேம்பாட்டிற்காக 1984ம் ஆண்டு ‘ஸ்கார்ப்’ என்னும் சேவை நிறுவனத்தை தொடங்கினார்.

இதனையடுத்து, 1992ம் ஆண்டு மனநலம் பாதித்தவர்களுக்கான அவரது சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவப்படுத்தியது. 2016ம் ஆண்டிற்குரிய அவ்வையார் விருதை தமிழக அரசு அவருக்கு வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சாரதா மேனன் காலமானார். இவரின் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த, இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் உயிரிழந்தார் | Tamilnadu The Psychiatrist Died Sharda Menon