தமிழகத்தில் வரும் நாட்களில் 5 டிகிரி வெப்பம் அதிகரிக்க உள்ளது
தமிழகத்தில் வரும் நாட்களில் 5 டிகிரி வெப்பம் கூடுதலாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவஸ்தைக்கு ஆளாக்கியுள்ளன. மேலும் எப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் இந்தாண்டு அதன் உச்சத்தை அடைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது கூடுதல் தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. அது என்னவெனில், அதன்படி, கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 80 சதவீதம் வரை இருப்பதால், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகரித்து காணப்படும்.
அதிலும் திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.