நடமாடும் தேநீர் கடைகளை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu-tea-shop-opening
By Nandhini Dec 15, 2021 05:33 AM GMT
Report

தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் புதிதாக 20 நடமாடும் டீ கடைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் ரூ.3 கோடி மதிப்பிட்டில் புதிதாக 20 நடமாடும் டீ கடைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் நடமாடும் தேனீர் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 கடைகளில் சென்னையில் 10, திருப்பூர், ஈரோடு தலா 3 கடையும், கோவையில் 4 கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

கலப்படமற்ற தரமான தேயிலை ரூ.10 விலையில் மக்களுக்கு விநியோகிக்க நடமாடும் டீ கடை திறக்கப்பட்டுள்ளது. கலப்படமற்ற, தரமான தேநீர் பொது மக்களுக்கு கிடைக்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் தேநீர் கடைகளை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Tamilnadu Tea Shop Opening