இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது - தமிழக அரசு அறிவிப்பு - மதுபிரியர்கள் கவலை
தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு -
குவாட்டர் ஒன்றுக்கு (சாதாரண ரகங்களுக்கு) 10 ரூபாய் வீதமும், உயர் ரகங்களுக்கு 20 ரூபாய் வீதமும் மதுபான விலை உயர்த்தப்படுகிறது.
மேலும், ஆஃப் பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வீதம் விலை உயர்த்தப்படுகிறது. கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மதுபானங்களின் விலை உயர்வால் தமிழ்நாடு அரசுக்கு நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதனையடுத்து, ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதால் மதுபிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.