கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

covid corona basker
By Jon Jan 17, 2021 06:31 PM GMT
Report

கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இது வரை யாருக்கும் ஒரு சிறு பக்க விளைவும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று தமிழகத்தில் மொத்தம் 166 மையங்களில் கொரோனாதடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார்.

கொரோனாதடுப்பு மருந்து போட்டுக் கொண்டவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் .கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகஅரசு முன்னுதாரணமாக விளங்குவதாக அமைச்சர் கூறினார். இதனால் கொரோனா தடுப்பு மருந்து குறித்து மக்கள் அச்சப்படவேண்டாம் என அமைச்சர் கூறினார்.