டெல்லி குடியரசு தின விழா - அணிவகுப்பில் கம்பீரமாக வந்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி - வைரலாகும் வீடியோ..!
டெல்லி குடியரசு தின விழாவில், அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி கம்பீரமாக வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி குடியரசு தின விழா
இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா உலகமும் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். இதன் பிறகு, அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

கம்பீரமாக வந்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி
ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம்பெற்றன. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் கலந்து கொண்டார்கள்.
முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில், குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை தொடங்கியுள்ளன.
டெல்லி குடியரசு தின விழழவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி கம்பீரமாக அணிவகுத்து வந்தது. இந்த அலங்கார ஊர்தியின் மையப்பகுதியில் கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி, அந்தக்காலத்திலேயே மருத்துவர்களாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார், 105 வயதிலும் வேளாண் துறையில் சாதித்து வரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஊர்தியின் பின்பகுதியில் சோழப்பேரரசர் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது. அலங்கார ஊர்தியுடன் கொம்பு மேளம், நாதஸ்வரம், தவில் வாசித்தபடி இசைக்கலைஞர்கள் இசைத்தபடி சென்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tamilnadu Convey show at Delhi Rajpat On 74th Republic day of India.@PMOIndia @annamalai_k @narendramodi @BJP4TamilNadu @CTR_Nirmalkumar pic.twitter.com/aasfoeozkI
— ARMYOFANNAMALAI (@armyofannamalai) January 26, 2023
Tamilnadu♥️? Tableau in the Republic day?? parade in New Delhi pic.twitter.com/VrAP0RXCHB
— Natarajan v (@Natarajanv1920V) January 26, 2023