சிறைவாசம் முடிந்து இன்று விடுதலை ஆகிறாரா சுதாகரன்?
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன் இன்று விடுதலையாவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலாவிற்கும், இளவரசிக்கும் தண்டனை காலம் முடிந்ததும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தினர். இதனால், இருவரும் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தவில்லை. இதனால், நீதிமன்றம் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதனால், மேலும் அவர் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார்.
சிறையில் இருக்கும் சுதாகரனின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவர் இன்று விடுதலை செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அவரை வரவேற்று அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் பெங்களூரில் முகாமிட்டிருக்கிறார்கள்.

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் IBC Tamil

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
