யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister tamilnadu subramanian
By Nandhini Dec 21, 2021 04:29 AM GMT
Report

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது மிகவும் தவறான அணுகுமுறை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது -

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை. இது குறித்து சட்டரீதிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வலரான லோகநாதன் தனது மனைவிக்கு வீட்டிலேயே யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

பிரசவம் பார்த்த கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மனைவி கோமதிக்கு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.