நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு...
shop
store
time extend
By Anupriyamkumaresan
தமிழகத்தில் நியாயவிலை கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதற்கட்ட ஊரடங்கின்போது நியாயவிலைக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. 2-ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது காலை 9 மணி முதல் 12.30 மணிவரை மட்டுமே நியாயவிலைக் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நியாயவிலை கடைகளின் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காலை 9 மணிமுதல் மதியம் 12.30 மணிவரையும், மீண்டும் மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரையும் நியாயவிலைக் கடைகள் செயல்படலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.