அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடிகர் கமலஹாசன் பிறந்தநாளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று 67-வது பிறந்தநாளை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகம், அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமலஹாசனுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.