கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

tamilnadu-stalin
By Nandhini Nov 21, 2021 07:06 AM GMT
Report

கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். இவர் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்ற போது, மர்மநபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி மற்றும் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு ஆய்வாளர் பூமிநாதன் காவல்நிலைய சிறப்பு உதவி 21-11-2021-ம் தேதி அதிகாலை நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளார்.

இச்சம்பவத்தின்போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவல்துறையின் பூமிநாதன். சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்து பணியிலிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Tamilnadu Stalin