உங்களின் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன்' என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது -
தொடர் மழை, அளவுக்கு அதிகமான நீர்வரத்து காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் துயர் துடைக்க பணியாற்றும் காவல் துறையினர், மின் துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவ துறையினர் என நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் நான் தலை வணங்குகிறேன்.
தன்னலம் பாராத உங்களது சேவையாலும், தியாகத்தாலும், கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்பட்டிருக்கிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப, அனைவரும் சேர்ந்து உழைப்போம். மக்களைக் காப்போம். உங்களின் தியாகம் விலை மதிப்பில்லாதது. உங்கள் சேவை மகத்தானது. உங்கள் உள்ளத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.