புதிய பாடத்திட்டம்; 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

Ministry of Education Tamil nadu
By Karthikraja May 18, 2026 10:57 AM GMT
Report

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 11 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.

சுமார் 9 லட்சம் மாணவர்கள் வெளியான இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்தது. 

புதிய பாடத்திட்டம்; 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு | Tamilnadu Sslc Result School Reopen Date

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மே 20 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

TNRESULTS.NIC.IN, DGE.TN.GO.IN, RESULTS.DIGILOCKER.GOV.IN ஆகிய இணையதளங்களிலும், 78452 52525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான 2 வாரங்களுக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மும்மொழிக்கொள்கை

மேலும், கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 1 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

புதிய பாடத்திட்டம்; 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு | Tamilnadu Sslc Result School Reopen Date

மேலும், 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடதிட்டத்திற்கான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, மும்மொழிக்கொள்கையை அமுல்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்கிறதா என்ற கேள்விக்கு, "இருமொழிக்கொள்கை என்பது பள்ளி கல்வியில் மட்டும் கிடையாது, தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. உறவுகளுடன் பேச தாய் மொழி, உலகத்துடன் பேச ஆங்கிலம் என்பதுதான் கொள்கை" என தெரிவித்துள்ளார்.