10th Result Date 2023: 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு!
10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
10, 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது.
குறிப்பாக ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில்,
தேர்வு முடிவு
மே 19 ஆம் தேதி, 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 10 மணிக்கு 10ஆம் வகுப்பிற்கும், பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்பிற்கும் முடிவுகள் வெளியாகும். பள்ளி மாணவர்காள் சமர்பித்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத்தின் (TNBSE) அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in/result.html அல்லது https://tnresults.nic.in/ -ல் தெரிந்துக்கொள்ளலாம்.