முதல் 10 நிமிடம் அதற்குதான்; பதட்டம் வேண்டாம் - 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

M K Stalin Tamil nadu
By Sumathi Mar 26, 2024 03:56 AM GMT
Report

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் 10 நிமிடம் அதற்குதான்; பதட்டம் வேண்டாம் - 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! | Tamilnadu Sslc 10Th Board Exam 2024 Stalin Wish

இதனை முன்னிட்டு தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 4 ஆயிரத்து 591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பு பணியில் 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வினை 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தனித் தேர்வர்கள் 28 ஆயிரம் பேரும், 235 சிறைக் கைதிகளும் அடங்குவர்.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் வாழ்த்து

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் தரப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை தேர்வாக மட்டும் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

முதல் 10 நிமிடம் அதற்குதான்; பதட்டம் வேண்டாம் - 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! | Tamilnadu Sslc 10Th Board Exam 2024 Stalin Wish

இதேபோல், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.