சரி கட்சி தர்மம் போய்ட்டு வாங்க: பஞ்ச் போட்ட சபாநாயகர்- கலகலத்த பேரவை

appavu trolledbjp trolled
By Irumporai Aug 28, 2021 12:54 PM GMT
Report

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திமுக எதிர்த்து வந்தது இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அப்போது பேசிய முதல்வர் மண்ணையும் விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை. வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் மூன்று சட்டங்களும் உள்ளதாக கூறினார்.

சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்ற எழுச்சிமிகுப் போராட்டம் நடந்தது இல்லை. ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டுவந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என ஸ்டாலின் கூற முன்மொழிந்த பின்னர் சபாநாயகர் அப்பாவு பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரனை பேச அழைத்தார்.

அப்போது அவர்,அப்படியே தீர்மானத்திற்கு நன்றி சொல்லிருங்க தமிழ்நாட்டோட நலன் கருதி என நக்கலாக கூற சிரித்துக்கொண்டே எழுந்து பேசிய நயினார் நாகேந்திரன், கலைக் கல்லூரிகள் தந்ததற்கு நான் நேற்றே நன்றி சொல்லிவிட்டேன். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்கிறது எனக்கூறி அதே சிரிப்புடன் அவையை விட்டு வெளியேறினார்.

அதற்கு பதில் கூறிய சபாநாயகர் அப்பாவு, சரி கட்சி (பாஜக) தர்மம் போய்ட்டு வாங்க என நச்சென்று பேச முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பேரவையில் உள்ள அனைவரும் கலகலவென்று சிரித்தனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.