மம்தாவுக்கும், பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? – சீமான்

tamilnadu-seeman-twitter-msg
By Nandhini Dec 28, 2021 11:04 AM GMT
Report

அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? என சீமான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கடந்த சில காட்களுக்கு முன்பதாக பொது மேடையில் பேசும் போது, திமுக-வை பச்சை சங்கி என்றும், செருப்பை தூக்கி காட்டியும் பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.

அந்த டுவிட்டர் பதிவில், ‘ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், ‘பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி’ என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை!’ என பதிவிட்டிருக்கிறார்.